/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி
/
போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி
ADDED : மார் 12, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் கிணற்றில் குளித்த வாலிபர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன்,21; டிரைவர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மதுபோதையில் அங்குள்ள விவசாய கிணற்றில் குளித்தார்.
அதிக மதுபோதையால் கிணற்றில் இருந்து ஏற முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.