/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காதலுடன் சென்ற இளம்பெண் சாலை விபத்தில் பலியானார்
/
காதலுடன் சென்ற இளம்பெண் சாலை விபத்தில் பலியானார்
ADDED : மே 28, 2024 11:14 PM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே காதலனுடன் சென்ற இளம்பெண் சாலை விபத்தில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராப்பாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் சீனுவாசன் மகள் பிரியதர்ஷினி,19; இவரை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மாத்துாரை சேர்ந்த அவரது காதலன் சுப்ரமணியன் மகன் விஜயரங்கன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கச்சிராயபாளையம் - வெள்ளிமேடு சாலையில் பிரியதர்ஷினி பைக்கை வாங்கி ஓட்டியுள்ளார். அதில் கிளாமேடு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது சாலையோர பாலத்தின் கட்டையில் பைக் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.