/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லிப்ட் கேட்டு தொழிலாளியின் பைக், மொபைல் போன் பறிப்பு பலே வாலிபர் கைது
/
லிப்ட் கேட்டு தொழிலாளியின் பைக், மொபைல் போன் பறிப்பு பலே வாலிபர் கைது
லிப்ட் கேட்டு தொழிலாளியின் பைக், மொபைல் போன் பறிப்பு பலே வாலிபர் கைது
லிப்ட் கேட்டு தொழிலாளியின் பைக், மொபைல் போன் பறிப்பு பலே வாலிபர் கைது
ADDED : ஆக 07, 2024 06:44 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே லிப்ட் கொடுத்த இளைஞரின் பைக் மற்றும் மொபைல் போனை அபகரித்து சென்று பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் அடுத்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருண் பாண்டியன், 24; விவசாயக் கூலி தொழிலாளி.
இவர் கடந்த 5ம் தேதி இரவு 8 :00 மணிக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மாடூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.
வாகனத்தை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டு சென்றபோது பிரிதிவிமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே சென்றபோது வாகனத்தை நிறுத்தி சொல்லி லிப்ட் கேட்ட நபர் இறங்கினார். அப்போது திடீரென அருண் பாண்டியனை தாக்கி விட்டு அவரது பைக் மற்றும் மொபைல் போனை அந்த நபர் பறித்துக் கொண்டு தப்பினார்.
அருண்பாண்டியன் புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை பிருதிவிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக சென்ற நபரை பிடித்த விசாரித்தார். அவர் அருண்பாண்டியனை தாக்கி பைக்கை பறித்து சென்றவர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேலும் விசாரித்த போது அவர், கணங்கூர் புதுகாலனியை சேர்ந்த சடையவேல் மகன் விஜய்;,24; என்று தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்
இவர் மீது கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு பைக் திருட்டு வழக்கு உள்ளது.