/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் சங்கராபுரத்தில் ஆடி பூர உற்சவம்
/
சின்னசேலம் சங்கராபுரத்தில் ஆடி பூர உற்சவம்
ADDED : ஆக 08, 2024 11:26 PM
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பூர உற்சவம் நடந்தது.
இதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி தங்க கவசம் அலங்காரத்தில், மலர்களால் பூஜைகள் செய்து மகாதீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் மற்றும் ஆர்ய வைசியர்கள், கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இளைஞர் சங்கத் தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் வாசவி மகிளா விபாக், வாசவி வனிதா கிளப், ஆர்யவைசிய இளைஞர் சங்கம் மற்றும் சமூக மக்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பின் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
திரளான பெண்கள் பங்கேற்றனர்.