sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அடுத்தடுத்து விபத்து; 7 பேர் காயம்

/

அடுத்தடுத்து விபத்து; 7 பேர் காயம்

அடுத்தடுத்து விபத்து; 7 பேர் காயம்

அடுத்தடுத்து விபத்து; 7 பேர் காயம்


ADDED : மே 08, 2024 11:30 PM

Google News

ADDED : மே 08, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்த நடந்த விபத்துக்களில் 7 பேர் காயமடைந்தனர்.

திருவள்ளுர் மாவட்டம், குந்தம்பாக்கத்தில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் உளுந்துார்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் அருகே சென்றபோது, பின் தொடர்ந்து வந்த அரசு பஸ் லாரியின் மீது மோதியது.

லாரி டிரைவர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், பஸ் பயணிகள் மதுரையை சேர்ந்த ஜானகிராமன், மருதம்மாள், ரமேஷ், கஜேந்திரகுமார், திருநாவுக்கரசு உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

உடன் அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

அதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்து குளிர் பானங்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி நோக்கி டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்றுப்பாலத்தில் சென்றபோது பின்னல் வந்த தனியார் ஆம்னி பஸ் டாரஸ் லாரி மீது மோதியது. இந்த விபதத்தில் வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன. இவ்விரு விபத்துக்கள் குறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us