/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் அருகே கார் விபத்து நடிகர் ஜீவா உட்பட மூவர் காயம்
/
சின்னசேலம் அருகே கார் விபத்து நடிகர் ஜீவா உட்பட மூவர் காயம்
சின்னசேலம் அருகே கார் விபத்து நடிகர் ஜீவா உட்பட மூவர் காயம்
சின்னசேலம் அருகே கார் விபத்து நடிகர் ஜீவா உட்பட மூவர் காயம்
ADDED : செப் 12, 2024 02:15 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே, நடிகர் ஜீவா ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
சென்னையை சேர்ந்தவர் சவுத்ரி மகன் ஜீவா,40; திரைப்பட நடிகர். இவர், டிஎண்14 ஏஜெ0159 என்ற பதிவெண் கொண்ட டொயோட்டா காரில் நேற்று சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்றார். காரில் ஒரு பெண்ணும் உடன் இருந்தார்.
மதியம் 2.00 மணியளவில் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க நடிகர் ஜீவா காரினை வலது புறமாக திருப்பியுள்ளார்.
அப்போது, பைக் மீது உரசியதுடன் சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் ஏறி, எதிர்திசை சாலையில் கார் இறங்கியது. காரில் இருந்த ஏர் பலுான் விரிந்ததால் ஜீவா மற்றும் உடன் வந்த பெண் லேசான காயத்துடன் தப்பினர்.
கார் உரசியதில் பைக்கில் சென்ற அம்மையகரத்தை சேர்ந்த கருப்பன் மகன் மணிகண்டன்,40; காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர், நடிகர் ஜீவா மற்றும் உடன் வந்த பெண் ஆகிய இருவரும் வேறு காரில் சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரிக்கின்றனர். காரில் நடிகர் ஜீவாவுடன் வந்த பெண், அவரது மேலாளர் என போலீசார் தெரிவித்தனர்.