சங்கராபுரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
சங்கராபுரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 10, 2026 05:40 PM
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் லலிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு; சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2026 -27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லுாரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்( இ.இ.இ.,), இ.சி.இ., சி.எஸ்.இ., இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், ஆட்டோமேஷன் அண்ட் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிக் டெக்னாலஜிஸ் ஆகிய 8 பாடப்பிரிவுகள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மூன்றாண்டு டிப்ளமோ பாடப்பிரிவுகளில் சேர வரும் 30 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாண்டு டிப்ளமோ சேர வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் https://www.tnpoly.in என்ற இணையதள முகவரி மூலமாகவும், கல்லுாரியில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கல்லுாரியில் சேர்ந்து பயில ஆண்டு கட்டணமாக ரூ.2,202 செலுத்த வேண்டும். கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு கல்வி உதவித்தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. எனவே, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் இக்கல்லுாரியில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
