/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
/
சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 06, 2024 06:15 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பிரசாரம் செய்தார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, கட்சியினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
அப்போது, குமரகுரு பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் பெண்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க., முடக்கியது.
அ.தி.மு.க., ஆட்சியில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டது. மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
எனவே, இத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்' என்றார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
அதேபோல், தென்சிறுவலுார், ராயர்பாளையம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டார்மங்களம், ஈரியூர் உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

