/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 02, 2024 04:09 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய கிராமங்களில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளருக்கு கிராம மக்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, நேற்று வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மண்மலை, க.செல்லம்பட்டு, பரிகம், கரடிசித்துார், மாத்துார், தாவடிப்பட்டு, பால்ராம்பட்டு, க.அலம்பளம், மோகூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளருக்கு பல்வேறு கிராமங்களில் பூர்ண கும்ப மரியாதையுடன், மலர்துவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.பி., காமராஜ், நகர செயலாளர் பாபு, ஜெ.,பேரவைச் செயலாளர் ஞானவேல், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், பாறை செயலாளர் வினோத், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, அருணாசலம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

