/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
/
தியாகதுருகத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
தியாகதுருகத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
தியாகதுருகத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 11, 2024 11:45 PM

தியாகதுருகம் : தியாகதுருகம் நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு வார்டு வாரியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, தியாகதுருகம் நகரில் பஸ்நிலையம், அண்ணா சிலை எதிரில் இருந்து நேற்று பிரசாரத்தை துவக்கினார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் ஷியாம்சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், நகர செயலாளர் முருகன், அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ், பாசறை செயலாளர் வேல்நம்பி முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் திரளான ஆதரவு அளிக்கும்படி முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு பேசினார்.
வேட்பாளர் குமரகுரு பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. இளைய தலைமுறையினர் மீது அக்கறை இல்லாத ஆட்சியை அகற்ற, லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.
நகரில் உள்ள 15 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் திறந்தவேனில் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். புக்குளம், பெரியமாம்பட்டு, உதயமாம்பட்டு ஆகிய ஊர்களில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். நகர நிர்வாகிகள் வேலுமணி, பாலமுரளிகிருஷ்ணன், சேகர், மாதேஸ்வரி, சீனுவாசன், ஏழுமலை, சங்கர், காமராஜ், ஒன்றிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மணிவண்ணன், பாண்டு, குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

