/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., குமரகுருவை எதிர்த்து 2 குமரகுரு வேட்பு மனு தாக்கல்

ADDED : மார் 28, 2024 04:35 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை எதிர்த்து, அதே பெயர் கொண்ட இருவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இரா. குமரகுரு போட்டியிடுகிறார். இவர் கடந்த 25ம் தேதி வேட்பு மனு அளித்தார்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 24 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதில், எம்.குன்னத்துார் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் குமரகுரு,38; வி.புத்துார் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் குமரகுரு,38; என, இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் குமரகுரு என்ற பெயரில் 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தொகுதியில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில், எதிர்த்து போட்டியிடும் கட்சி துாண்டுதலின் பேரில், குமரகுரு என்ற பெயர் கொண்ட இருவர் வேட்பு மனு அளித்து உள்ளதாக அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.