/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: எஸ்.ஐ.,- ஏட்டு 'சஸ்பெண்ட்'
/
பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: எஸ்.ஐ.,- ஏட்டு 'சஸ்பெண்ட்'
பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: எஸ்.ஐ.,- ஏட்டு 'சஸ்பெண்ட்'
பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: எஸ்.ஐ.,- ஏட்டு 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 02, 2024 06:57 AM

கள்ளக்குறிச்சி: 'தனது மனைவி சப் இன்ஸ்பெக்டருடன் தொடர்பில் இருந்ததால் கொலை செய்தேன்' என கணவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுாரைச் சேர்ந்தவர் அசோக், 28; இவரது மனைவி ரமணி, 32; இவரை கடந்த மாதம் 19ம் தேதி கணவர் அசோக் அடித்து கொலை செய்தார். எடைக்கல் போலீசார் அசோக்கை கைது செய்து விசாரித்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், திருநாவலுாரில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் உள்ளிட்ட சிலரிடம் ரமணி கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அதனை கைவிடுமாறு கூறியதால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் மனைவி ரமணியை அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தற்போது திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபாலிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.
அதில், உண்மை இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபாலை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று, டி.ஐ.ஜி., திஷாமிட்டல் உத்தரவிட்டார்.
மேலும், மரக்காணம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் பிரபாகரன் என்பவரும், கொலை செய்யப்பட்ட ரமணியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து, அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உளுந்துார்பேட்டையில் பிரபாகரன் பணிபுரிந்தபோது, அப்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.