நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : வாணாபுரத்தில் உயர்மின் கோபுர ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பு குழு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஒன்றிய தலைவர் சுரேஷ், ஒருங்கிணைப்பு குழு செயலாளர் வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வாணாபுரம் தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் போதிய இழப்பீடு வழங்கவில்லை, குறிப்பாக, விளைநில கிணறு, போர்வெல்லுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
எனவே, உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

