/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வி கடனுதவி வழங்கிட ஆலோசனை கூட்டம்
/
கல்வி கடனுதவி வழங்கிட ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 29, 2024 05:24 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்குதல் தொடர்பாக கல்லுாரி முதல்வர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசுகையில், மாவட்டத்தில், உயர் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களில் பலர் கல்லுாரி கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர். இதனால் தகுதியான மாணவர்களுக்கு வங்கிகள் தவறாமல் கல்விக் கடன் வழங்க வேண்டும். இதற்காக வங்கியாளர்கள் சிறப்பு முகாம்கள் நடத்திட ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், வங்கியாளர்கள், கல்லுாரி முதல்வர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.