/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
/
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
ADDED : செப் 01, 2024 05:09 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் நடந்தது.
மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு வேளாண் உபகரணங்கள், வேளாண் பணிகளை மேம்படுத்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயி கள் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான முகாமினை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
முகாம் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், பழுதுகளைக் கண்டறிதல், உதிரி பாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உழவுப் பொருட்கள் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகள் அறிந்துகொள்ள முடியும்.
மேலும், விவசாயிகள் தனியார் வேளாண் இயந் திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் கலந்துரையாடி பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
எனவே, இதுபோன்ற முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் குறித்த தகவல்களை கற்றுக்கொண்டு, குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தி னார்.