/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விதைப் பண்ணை வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
/
விதைப் பண்ணை வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : ஜூன் 10, 2024 01:03 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே விதைப் பண்ணை வயல்களில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் தாலுகாவில் 2024-25ம் ஆண்டுக்கான விதைப் பண்ணைகள் அமைத்து விதை கொள் முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நெல் 40 எக்டேர், கம்பு 10, உளுந்து 95, வேர்க்கடலை 11, எள் 5 எக்டேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் கிராமத்தில் கம்பு, உளுந்து விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள வயல்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் விதைப் பண்ணைகளில் தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், அதிக மகசூல் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து விதைப்பண்ணை அமைப்பது, பராமரிப்பது குறித்து எதேனும் சந்தேகம் இருந்தால் வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது உதவி விதை அலுவலரையோ தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது விதை உதவி அலுவலர் துரை மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.