/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திண்ணை பிரசாரம் அ.தி.மு.க., துவக்கம்
/
திண்ணை பிரசாரம் அ.தி.மு.க., துவக்கம்
ADDED : பிப் 28, 2025 11:48 PM

திருக்கோவிலுார்,; அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த திண்ணை பிரசார துவக்க விழா திருக்கோவிலுாரில் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் வரவேற்றார். நகர செயலாளர்கள் சுப்பு, ராஜ்குமார், ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி, சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
ஏரிக்கரை மூலையில் இருந்து துவங்கி, கடைவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், பழனிசாமி, இளங்கோவன், தனபால் ராஜ், ராமலிங்கம், ஏகாம்பரம், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் விநாயகமூர்த்தி.
மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சதீஷ் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் மஞ்சுளா ஏசுபாதம் உட்பட பலர் பங்கேற்றனர். நகர ஜெ., பேரவை நிர்வாகி புவன்குமார் நன்றி கூறினார்.