ADDED : பிப் 22, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மற்றும் அ.தி.மு.க., சாதனை விளக்க துண்டு பிரசுரம்வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உழவர் சந்தையில் துவங்கி பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், சுப்பராயன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.