/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை ஏ.கே.டி., மாணவர்கள் கவுரவிப்பு
/
பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை ஏ.கே.டி., மாணவர்கள் கவுரவிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை ஏ.கே.டி., மாணவர்கள் கவுரவிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை ஏ.கே.டி., மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : மே 13, 2024 04:45 AM

கள்ளக்குறிச்சி: பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி நிர்வாகம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பிடம் பெற்று கல்வி சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியில் மாணவர் நிதிஷ்குமார் 500க்கு 494, மாணவி அமலி அக்ஷ்யா, மாணவர் நகுலன் குமாரநாதன் 493, லோகேஷ் முத்தையா, ஜீவன்குமார் 492 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
கணிதத்தில் 33 பேர், அறிவியலில் 3, சமூக அறிவியலில் 6 என, 42 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர். அதேபோல், தமிழில் ஒருவரும், ஆங்கிலத்தில் 17 பேரும் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளியில் 490 மதிப்பெண்ணுக்கு மேல் 10 பேர், 480க்கு மேல் 40 பேர், 470க்கு மேல் 72 பேர், 450க்கு மேல் 141 பேர், 400க்கு மேல் 261 பேர், 350க்கு மேல் 365 பேர், 300க்கு மேல் 455 பேர் பெற்றுள்ளனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமி பிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன், பிரிவு முதல்வர் சுமதி, தமிழாசிரியர் மாயகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.