/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி தரவரிசை பட்டியலில் முதலிடம் நிர்வாக இயக்குனர் பெருமிதம்
/
ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி தரவரிசை பட்டியலில் முதலிடம் நிர்வாக இயக்குனர் பெருமிதம்
ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி தரவரிசை பட்டியலில் முதலிடம் நிர்வாக இயக்குனர் பெருமிதம்
ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி தரவரிசை பட்டியலில் முதலிடம் நிர்வாக இயக்குனர் பெருமிதம்
ADDED : ஜூன் 30, 2024 06:35 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி தமிழக அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இது குறித்து ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பாலிடெக்கனிக் கல்லுாரி மாணவ, மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை பன்னாட்டு நிறுவனங்களில் 11 ஆயிரத்து 940 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளோம்.
இதன் காரணமாக, கல்லுாரிகளின் தரவரிசைப் பட்டியலில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
தற்போது நடந்து முடிந்த அரசு தேர்வு முடிவுகளில் மாணவி ஷாலினி, லுாமினாதேவி ஆகியோர் 800க்கு 800 மதிப்பெண், மாணவி காயத்ரி 600க்கு 598 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எங்கள் கல்வி நிறுவனமின்றி மற்ற கல்லுாரி மாணவர்களையும் அழைத்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தியதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஹூண்டாய், டி.வி.எஸ்., அசோக் லைலேண்ட், ராயல் என்பீல்ட் போன்ற நிறுனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தருகிறோம்.
வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களின் தனித்திறமையை பாராட்டி ஹூண்டாய் நிறுவனம் எங்கள் கல்லுாரிக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளது. இதற்கு, பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
முன்னதாக, அரசு தேர் வில் சாதனை படைத்த மாணவர்களை கல்லுாரி தாளாளர் மகேந்திரன், செய லாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக் குனர் அபிநயா, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கபிலர் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.