/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., மகளிர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
ஏ.கே.டி., மகளிர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 10, 2024 09:26 PM

கள்ளக்குறிச்சி: பத்தாம் வகுப்பு தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மகளிர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி நாகசம்யுக்தா 500க்கு 482, மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர், தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 99, அறிவியல் 93, சமூக அறிவியல் 97 மதிப்பெண் எடுத்துள்ளார்.
சந்தோஷினி 480 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். இவர், தமிழ் 97, ஆங்கிலம் 94, கணிதம் 99, அறிவியல் 93, சமூக அறிவியல் 97 மதிப்பெண் எடுத்துள்ளார்.
மாணவிகள் நந்தனா, ஸ்ருதிகா ஆகியோர் 479 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
கணிதம் பாடத்தில் ஒரு மாணவி 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளார். 480 மதிப்பெண்ணுக்கு மேல் 2 பேர், 470க்கு மேல் 6 பேர், 450க்கு மேல் 7 பேர், 400க்கு மேல் 11 பேர், 350க்கு மேல் 15 பேர், 300க்கு மேல் 17 பேர் பெற்றுள்ளனர்.
தேர்வில் சாதனை புரிந்த மாணவிகள் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் அபிநயா, பள்ளி முதல்வர் ஏஞ்சலின் திருமறைச்செல்வி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.