/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழகத்தில் மதுவிலக்கு மா.கம்யூ., வலியுறுத்தல்
/
தமிழகத்தில் மதுவிலக்கு மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 26, 2024 02:23 AM

கள்ளக்குறிச்சி : தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.
கள்ளச்சாராய சாவை கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பரிதாபமான சாவு சம்பவத்தை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆதாயம் தேடும் கருவியாக நாங்கள் பார்க்கவில்லை. தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராய சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும்'' என்றார்.