/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி இடம் ஒதுக்கீடு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி இடம் ஒதுக்கீடு
ADDED : ஏப் 17, 2024 11:56 PM

கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான மூன்றாம் கட்ட சுழற்சி முறையில் பணிஇட ஒதுக்கீடு செய்ய்பபட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் 1,274 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் 1,2,3 மற்றும் 4 ஆகியோர்களுக்கான மூன்றாம் கட்டமாக கணினி முறையில் பணி இட ஒதுக்கீடு நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க் தலைமையில், கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் நடந்தது.
அப்போது, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சங்கர், தேர்தல் தாசில்தார் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

