/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : மே 02, 2024 11:12 PM

கச்சிராயபாளையம்: வடக்கனந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-1990 ஆண்டுகளில் மேல்நிலை வகுப்புகள் படித்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 34 ஆண்டுகள் கழித்து சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அப்போதைய ஆசிரியர்கள் கலியன், முத்துக்கிருஷ்ணன், திருவேங்கடம், கண்ணு, ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களை வாழ்த்தி, ஆசி வழங்கினர்.
மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் வடக்கனந்தல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் புத்தக அலமாரிகளை நன்கொடையாக வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து கலந்து கொண்டனர்.