/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : மே 06, 2024 03:43 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இப்பள்ளியில் 1990ம் ஆண்டு முதல் 97ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் 75 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அப்போது ஆசிரியர்களாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் சுந்தரபாண்டியன், ஆரோக்யசாமி, ஆசிரியர்கள் கோபால், பாஷா, ராஜேந்திரன், பச்சையான் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினர்.
முன்னாள் மாணவ, மாணவியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அனைவரும் தங்களின் பள்ளி பருவகால நிகழ்வுகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.