/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆலுார் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா
/
ஆலுார் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 11, 2025 04:23 AM

திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின்நுாற்றாண்டு விழா நினைவு நுழைவு வாயில் திறப்பு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா, புதிய மாணவர்கள் சேர்க்க விழா என ஐம்பெரும் விழா நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் முரளி கிருஷ்ணன், கஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம் நூற்றாண்டு விழா நினைவு நுழைவு வாயிலை திறந்து வைத்து, பள்ளியின் சிறந்த செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசினார்.
ஊராட்சித் தலைவர் மலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நீலா மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தனர்.
பள்ளியின் வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாண்குமார், தொழிலதிபர் நிதேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சங்கர்கணேஷ் நன்றி கூறினார்.