/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பத்ர காளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
/
பத்ர காளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED : மே 07, 2024 11:16 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசையொட்டி, நிகும்பலா யாகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று இரவு 7:00 மணிக்கு பத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து, தாலாட்டு பாடல் பாடி உற்சவம் நடந்தது.
கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பத்ரகாளி கவசம் பாடி, மிளகாய் வற்றல் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாகம் நடத்தினர். திரளான பக்தர்கள் யாகத்தீயில் மிளகாய் வற்றலை கொட்டி தோஷ நிவர்த்தி செய்து கொண்டனர்.

