/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இட ஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை: 'மாஜி' அமைச்சர் காட்டம்
/
இட ஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை: 'மாஜி' அமைச்சர் காட்டம்
இட ஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை: 'மாஜி' அமைச்சர் காட்டம்
இட ஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை: 'மாஜி' அமைச்சர் காட்டம்
ADDED : மார் 25, 2024 05:57 AM

உளுந்துார்பேட்டை: 'இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு பா.ம.க., அன்புமணிக்கு எந்த தகுதியும் இல்லை' என உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் பாக்கியராஜ் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் துரோகிகளோடும், எதிரிகளோடும் போராடுகிறோம். தொண்டர்கள் ஆதரவு இல்லாததால் ஓ.பி.எஸ்., நடுத்தெருவில் நிற்கிறார். இந்தியாவிலேயே தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கம் அ.தி.மு.க., தான்.
தி.மு.க., வில் ஜனநாயகம் இல்லை. வரும் லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம்.
நடுநிலை வாக்காளர்களை குறிவைத்து ஓட்டு சேகரிக்க வேண்டும். தி.மு.க., மீது கோபமாக இருக்கிறோம். ஆனால் தி.மு.க., நிர்வாகிகளே அவர்கள் மீது கோபமாக இருக்கின்றனர்.
இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு பா.ம.க., அன்புமணிக்கு அருகதையும், எந்த தகுதியும் இல்லை. இட ஒதுக்கீடு அறிவித்தால் செல்லாது என்று சொன்னோம். அதைப்பற்றி கவலை இல்லை, அறிவியுங்கள் என்றனர். இட ஒதுக்கீடு முக்கியம் என அவர்கள் கருதவில்லை.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் பாக்யராஜை வெற்றி பெற வைக்கவேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.

