/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு புகுந்து திருட முயற்சி: ஆந்திரா வாலிபர் கைது
/
வீடு புகுந்து திருட முயற்சி: ஆந்திரா வாலிபர் கைது
ADDED : பிப் 25, 2025 06:57 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, துருகம் சாலையை சேர்ந்தவர் பாபா நிவாஸ். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி யாஸ்மின்,37; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு உள்ளே இருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர், வீட்டில் யாரும் இல்லை என கருதி கதவை திறக்க முயன்றார். திடீரென வீட்டின் மாடிக்கு சென்று மீண்டும் கீழே வந்து கதவை உடைக்க முயன்றார். சத்தம் கேட்டு திடுக்கிட்ட யாஸ்மின், உறவினர்களுக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் உதவியுடன் மர்ம நபரை பிடித்து கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவனிடம் ஒப்படைத்து புகார் செய்தார்.
விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துார் மாவட்டம் கங்காவரத்தைச் சேர்ந்த நாகமணி,40; என்பது தெரிந்தது. ஆந்திராவிலிருந்து தென்னை, கொய்யா ஆகிய மரக்கன்றுகளை மொத்தமாக கொண்டு வந்து எலவனாசூர்கோட்டையில் தங்கி வீடு வீடாக விற்பனை செய்வது போல் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்கு பதிந்து நாகமணியை கைது செய்து, இவ்வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.