/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண்துறை தகவல்களுக்கு மொபைல் எண்கள் அறிவிப்பு
/
வேளாண்துறை தகவல்களுக்கு மொபைல் எண்கள் அறிவிப்பு
ADDED : பிப் 26, 2025 05:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவிடும் முகாம், 9 வட்டாரங்களில், 562 வருவாய் கிராமங்களில் நடக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் மானியம், இடு பொருட்கள் குறித்து வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட துறைகளின் தகவல்களை பெற, விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், வேளாண் துறை முக்கிய விவரங்களை அறிய தச்சூர், வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை, 93858 1942 ; துணை இயக்குநர், (கலெக்டரின் நேர்முக உதவியாளர்) அலுவலகத்தை; 93858 90420; ஆகிய் எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

