/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
/
நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ADDED : மே 29, 2024 05:10 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 9 லட்சத்திற்கு காசோலை மற்றும் ரூ.62 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது,.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், கணக்கில் காட்டப்படாத பணம் புழுங்குவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று மாலை 5:30 மணிக்கு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் தலா ரூ.3 லட்சம் என எழுதப்பட்ட மூன்று வங்கி காசோலைகள் மற்றும் ரூ.62 ஆயிரம் பணம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உதவி இயக்குநர் ராகுல்ராஜ்,29; உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.