/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
/
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 07, 2024 06:31 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் கோதம்சந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட மனநல மருத்துவர் பிரவீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதைப் பொருளால் ஏற்படக்கூடிய தனிநபர் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
ரோட்டரி சாசன தலைவர் வாசன், பொருளாளர் சௌந்தர்ராஜன், உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.