/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் போதை ஒழிப்பு கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் போதை ஒழிப்பு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் போதை ஒழிப்பு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் போதை ஒழிப்பு கருத்தரங்கம்
ADDED : செப் 05, 2024 06:52 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் போதை ஒழிப்பு மற்றும் பெண் சிதைவு கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, டாக்டர் மனோபாலா தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் நர்கீஸ்பேகம் வரவேற்றார்.
கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர், பாராமெடிக்கல் உதவி பேராசிரியர் பவுலின்சங்கீதா வாழ்த்துரை வழங்கினர். துறைத்தலைவர் சக்திபிருந்தா சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக, பெங்களூரு ஆஷா கமல் திட்டங்களின் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், மென்பொருள் பொறியாளர் காடுப்ரே ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் தீய பழக்க வழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், எப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் இருந்தாலும், சரியான திட்டமிடலுடன் இலக்கை நிர்ணயித்து சுய முயற்சியால் முன்னேற வேண்டும், அதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கதை மூலமாக மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
கருத்தரங்கில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். துறைத்தலைவர் சித்ராதேவி நன்றி கூறினார்.