தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : ஆக 07, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் டெம்பிள் சிட்டி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

திருக்கோவிலுார் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம், பேச்சு, பாட்டு போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை பாராட்டும் வகையில், திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் ஆப் டெம்பிள் சிட்டி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் குமுதவல்லி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் கோதம்சந்த், செந்தில்குமார், சாசன தலைவர் வாசன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் செயலாளர் கார்த்திக்ராம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, சங்க உறுப்பினர்கள் கல்யாண்குமார், ஆசிரியர்கள் நாகமணி, மாலதி, விமலா, தில்ஷாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us