/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 21, 2024 07:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி தொலை தொடர்புத்துறை கணக்கு மற்றும் நிதி பிரிவு அதிகாரிகள் நல அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த 15 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் ஜெயராமன், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்க மாநில துணைத் தலைவர் திருஞானம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்பழகன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் மணிமாறன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ், ஆசிரியர்கள் நாகராஜன், ஹெலன்ஜெயா வாழ்த்திப் பேசினர்.
விழாவில், தொட்டியம் பெரிய சிறுவத்துார், எடுத்தவாய்நத்தம், கரடிசித்துார் அரசு பள்ளிகளில் கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா 2,500 ரூபாய், இரண்டாமிடம் பிடித்தவருக்கு தலா 1,500, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா 1,500 வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.