/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி அடித்து கொலை தலைமறைவான கணவர் கைது உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
/
மனைவி அடித்து கொலை தலைமறைவான கணவர் கைது உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
மனைவி அடித்து கொலை தலைமறைவான கணவர் கைது உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
மனைவி அடித்து கொலை தலைமறைவான கணவர் கைது உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
ADDED : ஆக 22, 2024 01:53 AM

உளுந்துார்பேட்டை, : குடும்ப பிரச்னையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்,29; ஆட்டோ டிரைவர். பில்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ரமணி,32; விருத்தாசலத்தில் உள்ள வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
அசோக்குமாரின் ஆட்டோவில் அவ்வப்போது சென்று வந்ததில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர்.
பில்லுாரில், வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களாக இவர்களுக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 19ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அசோக்குமார் தாக்கியதில், மயங்கி விழுந்த ரமணி இறந்தார்.
அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் வீட்டை பூட்டிக் கொண்டு, தனது இரு குழந்தைகளை அழைத்து சென்று பாண்டூரில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவானார்.
இந்நிலையில் நேற்று ரமணியை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டபோது, போனை எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ரமணி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த எடைக்கல் போலீசார் ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான அசோக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில், ரமணி, அசோக்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.