/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சொத்து தகராறில் 2 பேரை வெட்டியவர் கைது
/
சொத்து தகராறில் 2 பேரை வெட்டியவர் கைது
ADDED : செப் 14, 2024 08:01 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் மகன் அய்யப்பன்,38; இவருக்கும், கோவிந்தராஜீலு மகன் தனசேகர்,48; என்பவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் அய்யப்பன் வீட்டின் இரும்பு கேட்டினை தனசேகர் தட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு அய்யப்பன் அவரது தந்தை தனசேகரன், சரவணவேல் ஆகிய 3 பேரும் வெளியே வந்து பார்த்தனர். அப்போது, தனசேகர் தான் வைத்திருந்த கொடுவாளால் அய்யப்பனின் தலையிலும், தடுக்க முயன்ற சரவணவேலின் இடது கை பகுதியிலும் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில், இருவருக்கும் இரத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தனசேகரை கைது செய்தனர்.