/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் கடத்திய நிருபர் கைது
/
மதுபாட்டில் கடத்திய நிருபர் கைது
ADDED : மே 24, 2024 03:52 AM

கச்சிராயபாளையம்: புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திய நிருபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மாலை சேராப்பட்டு பிரிவு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த டாடா இண்டிகா காரை நிறுத்தி, சோதனை செய்ததில், மூன்று அட்டை பெட்டிகளில் புதுச்சேரி மாநில 144 குவாட்டர் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டு பிடித்து, காருடன் பறிமுதல் செய்தனர்.
காரை ஓட்டி வந்தவரை விசாரித்ததில், கரியாலுாரை சேர்ந்த அருளானந்தன் மகன் அரவிந்தன்,33; என்பதும், ஒரு செய்தி நிறுவனத்தில் பணி புரியும் இவர், அவ்வப்போது புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து, அரவிந்தனை கைது செய்தனர்.