ADDED : ஆக 29, 2024 08:18 AM
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் கருப்ப படையாட்சி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 46; கொத்தனார்.
இவர் கடந்த 25ம் தேதி தனது பைக்கில் தியாகதுருகத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடை எதிரே சென்றபோது முருகன் நகரை சேர்ந்த முகமது கலீல் ரகுமான் மகன் சையத் இம்ரான், 36; என்பவர் சாலையின் குறுக்கே சென்றார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். தகவலறிந்த சைய்யத் இம்ரான் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர். இதுகுறித்து ஏழுமலை மற்றும் சைய்யத் இம்ரான் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

