ADDED : மே 24, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி முன்னிட்டு கோமாதாவிற்கு அஷ்ட லட்சுமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு கோவில் முன்னாள் உள்ள கோமாதாவிற்கு பெண்கள் அஷ்ட லட்சுமி மந்திரம் கூறி கோமாதாவிற்கு உடல் முழுதும் பொட்டுக்கள் வைத்து மாலை அணிவித்து வணங்கினர்.
தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தது. வாசவி, வனிதா கிளப் பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.