/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடனை திருப்பித்தர மறுத்தவர் மீது தாக்கு
/
கடனை திருப்பித்தர மறுத்தவர் மீது தாக்கு
ADDED : மார் 04, 2025 07:16 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே கடனை திருப்பித் தர மறுத்த நபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தியாகதுருகம் அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 49; விவசாயி. இவர் அதே ஊரைச் சேர்ந்த சரவணபிள்ளை என்பவரிடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.
வட்டி தொகையை கொடுத்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சரவண பிள்ளை இறந்து விட்டார். அவரது பேத்தியின் கணவரான கோவிந்தன் மகன் தினேஷ், 31; என்பவரிடம் வட்டி தொகையை முருகேசன் செலுத்தி வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் முருகேசனிடம் முழு பணத்தையும் திருப்பி கொடுக்கும்படி தினேஷ் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று தினேஷ் ஆத்திரமடைந்து முருகேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின்படி தினேஷ் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.