ADDED : செப் 01, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்ட ஆட்டோ காணாமல் போனது குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மணி, 39; ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 28ம் தேதி இரவு தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் 29ம் தேதி காலை பார்த்தபோது ஆட்டோவைக் காணவில்லை.
இதுகுறித்து, மணி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.