ADDED : ஏப் 28, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த வடகுரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்வராயன், 30; இவர் ஆட்டோவை எஸ். மலையனுார் சாலையில் ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கல்வராயன், ஆட்டோவில் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த செம்மலை வைகை, 55; ஆகியோர் படுக்காயம் அடைந்தனர்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்வராயன் இறந்தார்.
எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

