/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுலத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுலத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுலத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுலத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ADDED : செப் 05, 2024 06:54 AM

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் 2023 -- 24 கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் 3 இடங்களில் பிடித்து வெற்றி பெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேமப்ரியா அம்பா தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி ஆசியுரை வழங்கினார்.
முன்னாள் மாணவர் பெரிய தம்பி முன்னாள் மாணவி அருணா ஆகியோர் தங்களது பள்ளி கல்வி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குருகுலத்தின் முதல்வர் சசிகலா வரவேற்று பேசினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.