ADDED : ஜூன் 07, 2026 04:30 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டம் 2.0, திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள்படி குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, கவன சிறப்பு கழிவுகள் என 4 வகையாக பிரித்து வழங்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நகரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில், வீணான காய்கறிகள், டீ, காபித்துாள், முட்டை ஓடுகள், மீதமான உணவு, மாமிசக்கழிவு ஆகிய குப்பைகள் அனைத்தும் ஈரக்கழிவுகள் எனவும், பிளாஸ்டிக், துணி, பாலிதீன் பைகள், குளிர்பான பாக்கெட்கள், அட்டைபெட்டி ஆகிய மக்காத குப்பைகள் அனைத்தும் உலர் கழிவு எனவும், நாப்கின், டயாபர், பேண்டேஜ், பழைய ஊசிகள் ஆகியன சுகாதார கழிவு எனவும், மின்சாதனம், பெயிண்ட் டப்பாக்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த கண்ணாடி, வேதி குடுவைகள் ஆகியன கவன சிறப்பு கழிவுகள் என 4 வகையாக தரம் பிரித்து நகராட்சி குப்பை சேகரிப்பவர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சத்யா, பரப்புரையாளர் இளவரசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
