/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
ADDED : ஆக 04, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார்.
அரசம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்துக்குமரன் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதனை ஒழிப்பது குறித்தும் மாணவர்களிடையே விளக்கினார்.
ஆசிரியர் கதிரவன் நன்றி கூறினார்.