/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 31ம் தேதி பேட்மிண்டன் போட்டி
/
கள்ளக்குறிச்சியில் 31ம் தேதி பேட்மிண்டன் போட்டி
ADDED : ஆக 29, 2024 08:16 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட 'பேட்மிண்டன் அசோசியேஷன்' சார்பில் வரும் 31ம் தேதி பேட்மிட்டன் போட்டி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலையில், தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள 'ஐ ெஷட்டில் ஸ்டுடியோ'வில் வரும் 31ம் தேதி (சனிக்கிழமை) காலை 8:00 மணியளவில் பேட்மிண்டன் போட்டி நடக்கிறது.
இதில், ஒற்றையர் பிரிவில் 11 மற்றும் 13 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள், நுழைவு கட்டணமாக ரூ.250 செலுத்தி போட்டியில் பங்கேற்கலாம். இரட்டையர் பிரிவில் 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் நுழைவுக்கட்டணமாக ரூ.500 செலுத்தி பங்கேற்கலாம்.
விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் தங்களது ஆதார் கார்டை சமர்ப்பித்து, வரும் 31ம் தேதி காலை 7:00 மணி வரை முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களை 78451 13557 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்டறியலாம். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும்.

