/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சென்று திரும்பியவர் பலி
/
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சென்று திரும்பியவர் பலி
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சென்று திரும்பியவர் பலி
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சென்று திரும்பியவர் பலி
ADDED : செப் 01, 2024 05:59 AM
உளுந்துார்பேட்டை : வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய தொழிலாளி உளுந்துார்பேட்டை அருகே நெஞ்சு வலியால் இறந்தார்.
சென்னை, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற பப்ளி, 36; மாட்டிறைச்சி வெட்டும் தொழிலாளி.இவர், நண்பர்கள் 8 பேருடன் இனோவா காரில் கடந்த 28ம் தேதி வேளாங்கண்ணி கோவில் கொடியேற்ற திருவிழாவிற்கு சென்றனர்.
திருவிழாவில் பங்கேற்று, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் திருச்சி வழியாக சென்னை செல்வதற்காக ஆசனுார் அருகே வந்தனர். அப்போது அங்குள்ள டீ கடையில் காரை நிறுத்திவிட்டு அனைவரும் டீ சாப்பிட்டனர்.
அங்கு, மணிகண்டனுக்கு நெஞ்சுவலி ஏற்பட் டுள்ளது. உடன், மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.