/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'
/
அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'
அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'
அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'
ADDED : ஆக 01, 2024 07:26 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் அரசு டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசார் மற்றும் கலால் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
பெருவங்கூர் டாஸ்மாக் கடை அருகே அரசு உரிமமின்றி 'பார்' இயங்கியது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த 180 மி.லி., கொண்ட 49 மதுபாட்டில்கள், 2 சிலிண்டர்கள், 1 காஸ் அடுப்பு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உரிமமின்றி செயல்பட்ட பாருக்கு பெருவங்கூர் வி.ஏ.ஓ., ரஜினாபேகம், கிராம உதவியாளர் செம்மலை ஆகியோர் 'சீல்' வைத்தனர்.
இது தொடர்பாக, மனோகர், மணி மற்றும் மாடூரைச் சேர்ந்த கண்ணன் மகன் ஜெயபிரகாஷ், 30; ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து, ஜெயபிரகாைஷ கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.