/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதி நினைவேந்தல் நிகழ்ச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதி நினைவேந்தல் நிகழ்ச்சி
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதி நினைவேந்தல் நிகழ்ச்சி
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதி நினைவேந்தல் நிகழ்ச்சி
ADDED : செப் 13, 2024 07:45 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை-அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் நினைவலையில் பாரதி என்ற தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கி பாரதியாரின் படைப்புகள் குறித்து பேசினார்.கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். மாணவி அனிடாகேத்ரின் வரவேற்றார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் பாரதியாரின் கவிதை, பாடல், பேச்சு என தமிழ்த்திறன்களை வெளிப்படுத்தினர்.
தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் பன்னீர்செல்வம், கோமதி, நித்யா, பரசுராமன், சின்னப்பொன்னு, சுபலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மாணவிகள் அபிநயா, ஜெயபாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
மாணவி அபி நன்றி கூறினார்.